கட்டாரிலிருந்து 28 கடற்படை ஊழியர்கள் நாட்டிற்கு வருகை
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் பணியாற்றுவதற்காக 28 கடற்படை ஊழியர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக இன்று அதிகாலை 1.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், அவர்கள் அனைவரும் கொழும்பிலுள்ள இரண்டு தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவர்கள் கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.