வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளில் கொட்டவுள்ள மழை...

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளில் கொட்டவுள்ள மழை...

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் தொிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளில் கொட்டவுள்ள மழை | Rainfall In Many Parts Of The Countryஊவா, வட மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும், புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளில் கொட்டவுள்ள மழை | Rainfall In Many Parts Of The Country

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.