பிரபல நடிகையை நேரில் பார்க்க ஆசைப்பட்ட அஜித் - நிறைவேற்றிய மஞ்சு வாரியர்..!

பிரபல நடிகையை நேரில் பார்க்க ஆசைப்பட்ட அஜித் - நிறைவேற்றிய மஞ்சு வாரியர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் "துணிவு". இதில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அஜித் "துணிவு" படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மஞ்சு வாரியரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "அசல்" படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பாவனாவிடம் பேச வேண்டும் என கேட்டுள்ளார்.

இதை கேட்ட மஞ்சு உடனே பாவனாவுக்கு கால் செய்துள்ளார். ஆனால் அவருக்கு கால் ரீச்சாகவில்லை.இதை அறிந்த பாவனா சில நாட்கள் கழித்து சென்னை வந்துள்ளார்.

அப்போது அவர் "துணிவு" படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித் மற்றும் மஞ்சு வாரியரை சந்தித்துள்ளார். அவர்களுடன் இணைந்து மதிய உணவை சாப்பிட்ட பாவனா, அதனை அஜித் பிறந்தநாள் அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்" என பதிவிட்டிருந்தார்.

பிரபல நடிகையை நேரில் பார்க்க ஆசைப்பட்ட அஜித் - நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | Ajith Wish To See Actress Bhavana

மேலும், நடிகை பாவனா ஒரு பேட்டியில் கூறியதாவது, "அவருடன் எப்பவோ நடித்த நடிகை நான். ஆனால் அவர் இன்னும் என்னை நியாபகம் வைத்து என்னை நலம் விசாரித்தது மகிழ்ச்சை ஏற்படித்திருக்கிறது. இவரின் இந்த பண்பால் தான் இவரை அனைவரும் கொண்டாடுகின்றனர்" என கூறினார்.