யாழில் குப்பை கொட்டுவோரிற்கு சூனியம் வைத்த வீட்டு உரிமையாளர் - அச்சத்தால் பரபரப்பு..!

யாழில் குப்பை கொட்டுவோரிற்கு சூனியம் வைத்த வீட்டு உரிமையாளர் - அச்சத்தால் பரபரப்பு..!

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பகுதியில் காணியின் வாசலில் வைக்கப்பட்ட வித்தியாசமான பதாதையொன்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பைத் தனது வீட்டின் முன்னால் பதாதையொன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபரின் வீட்டு பகுதியின் வீதியோரமாகப் பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளதால் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.

யாழில் குப்பை கொட்டுவோரிற்கு சூனியம் வைத்த வீட்டு உரிமையாளர் - அச்சத்தால் பரபரப்பு | Pilli Sooniyam Strange Announcement Public Fear

இதனால் பொறுமை இழந்த குறித்த நபர் பொம்மை ஒன்றையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டி, " சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்" எனப் பதாகை எழுதிக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.