யாழில் மின்சாரம் தாக்கி வயோதிப பெண் பலி...

யாழில் மின்சாரம் தாக்கி வயோதிப பெண் பலி...

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம்(24.06.2023) பதிவாகியுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி என்ற 60 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் மின்சாரம் தாக்கி வயோதிப பெண் பலி | Elderly Woman Dies Due To Electric Shock In Jaffnaஇதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.