முன்னாள் இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படை...

முன்னாள் இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படை...

இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படை | The Special Task Force Shot Dead An Ex Armyபல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது இவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

முன்னாள் இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படை | The Special Task Force Shot Dead An Ex Army

சந்தேக நபர் மினுவாங்கொடை, பஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.