பிரபல வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு - கொழும்பில் சம்பவம்..!

பிரபல வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு - கொழும்பில் சம்பவம்..!

இலங்கையின் பிரபல காலணி வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மீது இன்று (22.06.2023) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வர்த்தகர் வீட்டின் மீது T56 ரக துப்பாக்கியிலிருந்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் காலணி வர்த்தகர் குடியிருக்காத நிலையில், அவரது தொழிற்சாலையில் நிர்வாக பணிப்பாளராக பணியாற்றும் வணிக நிறுவன உரிமையாளரின் மகன் வசித்துவருவதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரபல வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு - கொழும்பில் சம்பவம்..! | Gun Shoot Boralla Sri Lanka

 

இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் 5.45 மணி வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனிப்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் அச்சுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.