
AI மூலம் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்கள் உருவாக்கிய மாணவன்
கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரை நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தரம் 10 ஆம் வகுப்பு படிக்கும் குறித்த மாணவர்கள், இதனை மேற்கொண்டுள்ளதுடன் இச் சம்பவம் ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவர் கண்டி பொலிஸாருக்கு அறிவித்தார்.
விசாரணையடுத்து மாணவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மடிக்கணினி மற்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளை கைப்பற்றப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.