யாழ். வல்லை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு..!

யாழ். வல்லை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம் வல்லை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் இன்று(22.06.2023) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வல்வெட்டிதுறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவராத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

யாழ். வல்லை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு | Jaffna Kill Body Police Investigation