பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..!

பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..!

சட்டவிரோதமான முறையில் இடம்பெறுகின்ற விலங்கு வேட்டைகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிய வகை விலங்குகளை பாதுகாத்தல் அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுடன் அது குறித்து உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- yarlnews --><ins class="adsbygoogle"     style="display:block"     data-ad-client="ca-pub-6351278828785619"     data-ad-slot="1437470177"     data-ad-format="auto"     data-full-width-responsive="true"></ins><script>     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>

நேற்றைய தினம் நல்லதன்னி - மாபகந்த பிரதேசத்தில் இரு புலிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் விலங்குகளை கொலை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மீண்டும் அவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலாசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.