யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் சடலம் ஆந்திராவில் மீட்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் சடலம் ஆந்திராவில் மீட்பு!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சடல எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள இடத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த ஒருவரினுடைய கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறித்த சடலம் இலங்கையைச் சேர்ந்த ஒருவரினுடையதாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் இந்திய காவல்துறையினரால் இலங்கை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் சடலம் ஆந்திராவில் மீட்பு! | Jaffna Person Skeleton Recoverd In Andhra Pradesh

ஆந்திர மாநிலத்தில் ரயில் பாதையின் அருகாமையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்திற்கு அருகாமையில் வீரதேவன் ஒழுங்கை, துன்னாலை மத்தி, கரவெட்டி சேர்ந்த 1947 ஆம் ஆண்டு பிறந்த அருணாச்சலம் சிவராசா என்பவரது கடவுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது.