மண்மேட்டில் மோதி பேருந்து கோரவிபத்து -மாணவன் பலி பலர் படுகாயம்..!

மண்மேட்டில் மோதி பேருந்து கோரவிபத்து -மாணவன் பலி பலர் படுகாயம்..!

இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பதுரலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் கெலின்கந்த கொலனி அகலவத்தை என்ற முகவரியில் வசிக்கும் பி.எச்.டி.தில்ஷான் என்ற16 வயதுடைய பாடசாலை மாணவர் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மத்துகம டிப்போவிற்குச் சொந்தமான பேருந்து கெலிங்கந்தவிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்ததாகவும், மகேலி எல்ல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த அணையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன பதுரலிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.