இளம் ஆசிரியர் பரிதாபமாக பலி..!

இளம் ஆசிரியர் பரிதாபமாக பலி..!

வடமேற்கு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் இளம் ஆசியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மாகந்துர வளாகத்தில் விவசாய பீடத்தில் கற்பிக்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் சசித் தாரக சமரகோன் என்ற 26 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.