
வீட்டினுள் கைக்குண்டு வைத்திருந்த நபர் கைது! யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் கைக்குண்டு வைத்திருந்த ஒருவரை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைதான் நபர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் பெரிய சத்தமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
அவரது அட்டகாசத்தை பொறுக்கமுடியாத அயலவர்கள் காவல்துறை அவசர அழைப்புக்கு முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த பிரதேசத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது வீட்டிக்கு வந்து அவரை தேடியுள்ளார்.
இதன்போது வீட்டில் உள்ள கைக்குண்டையும் மீட்டதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.