தலைவர் பிரபாகரனை செவ்விகண்ட இந்திய ஊடகவியலாளர்..!

தலைவர் பிரபாகரனை செவ்விகண்ட இந்திய ஊடகவியலாளர்..!

இந்திய படைகளின் ஆக்கிரமிப்பு காலம் பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு செவ்வியை வழங்கி இருந்தார்.

இந்திய படையினர் ஈழ மண்ணை விட்டு வெளியேறிய பின்னரே அவரது பெரும்பாலான செவ்விகள் வெளியிடப்பட்டன.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பு காலத்தின் போது அவரது உணர்வுகள் எப்படி இருந்தன என்பது பற்றி அந்த செவ்விகளின் போது அவர் ஒரு சில உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்திய படைகள் வெளியேறியதன் பின்பு டைம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பிற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழங்கி இருந்த செவ்வி அந்த காலத்திலும் சரி இப்பொழுதும் சரி மிகவும் பிரபல்யமான ஒன்று.

அனிதா பிரதாப் இந்தியாவில் பிரபல பெண் ஊடகவியலாளர் இலங்கையின் யுத்த நிலவரங்கள், அரசியல் உள்விவகாரங்கள், ஆப்கானிஸ்தான் யுத்த நிலவரங்கள் என்று களமுனைகளுக்குச் சென்று செய்தி சேகரித்த ஒரு துணிகரமான ஊடகவியலாளர்.

இவ்வாறு, அனிதா பிரதாப் முல்லைத்தீவில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் ஒன்றுக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவரை சந்தித்து அந்த செவ்வியை பதிவு செய்திருந்தார்.

குறித்த செவ்வியின் போது கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களையும் வெளிக்கொண்டு வருகிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,