கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி..!

கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி..!

கிளிநொச்சி - கோனாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை(30.05.2023) இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் தனது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக நேற்று(01.06.2023) மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்படுத்துவர்களை தண்டிப்பதற்கு அரச உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.