
புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மேற்கூறிய விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் தமது கடவுச்சீட்டை இணைய வழியாக புதுப்பித்துக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் கடவுச்சீட்டை பெறுவதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களுக்கோ உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கோ செல்ல வேண்டிய தேவையில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணைய வழி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நாமல் ராஜபக்ச இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
தனித்தனியாக, இணைய வழிய நுழைவு விசைவு விண்ணப்ப நடைமுறையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில விவாதிக்கப்பட்டது.
வெளிநாட்டவர்கள் நுழைவு விசைவுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான பொறிமுறையை உடனடியாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் நாமல் ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினருக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.