காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகளும் உயிரிழப்பு
வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (15) காலை இவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.