கவனயீனத்தால் உயிரிழந்த 4 வயது சிறுமி - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்..!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(26) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் விறகுடன் நின்ற தனது லேண் மாஸ்டர் வாகனத்தை பின்னோக்கி எடுக்க முற்பட்டுள்ளார்.
பின்புறம் சிறுமி இருந்ததை அறியாமல் குறித்த நபர் வாகனத்தை பின்னோக்கி செலுத்தியபோது சில்லுக்குள் அகப்பட்டு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.