இராணுவ வீரர் ஒருவர் வெட்டிக்கொலை: வெளியான காரணம்…!

இராணுவ வீரர் ஒருவர் வெட்டிக்கொலை: வெளியான காரணம்…!

விடுமுறையில் வீடு வந்திருந்த இராணுவச் வீரர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (25.05.2023) மாலை பண்டாரவளைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

37 வயதுடைய எம்.பி. குணரட்ன என்ற இராணுவச் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த இராணுவச் வீரருக்கும் அயல்வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கொலையாளியும் உயிரிழந்த இராணுவச் வீரரையும் சம்பவம் இடம்பெற்றபோது மதுபோதையில் இருந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இராணுவச் வீரரும் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.