கொழும்பு துறைமுக நகரத்திற்குள் நுழையும் சிங்கப்பூர் நிறுவனம்!

கொழும்பு துறைமுக நகரத்திற்குள் நுழையும் சிங்கப்பூர் நிறுவனம்!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற "ஒன் வேர்ல்ட் டூட்டி ஃப்ரீ" குழுமம், இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரமான கொழும்பில் வரியில்லா வணிக வளாகத்தை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. 

அதன்படி, ஒன் வேர்ல்ட் டூட்டி ஃப்ரீ குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெய்ரா ஷான் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரியத் பந்துவிக்ரம ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். 

இதன் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக நகர அலுவலகம் தெரிவித்துள்ளது.