
நாட்டில் சில இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகும் - வளிமண்டலவியல் திணைக்களம்…!
இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பினை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.