யாழ். போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையளித்த வெளிநாடு வாழ் தமிழர்கள்…!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையளித்த வெளிநாடு வாழ் தமிழர்கள்…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தில் நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்து கொள்வனவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

யாழ். நீரிழிவுக் கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக,

ஜேர்மனியைச் சேர்ந்த துரைசிங்கம் மோகனதாஸ் ஒரு இலட்சம் ரூபாவும், லண்டனைச் சேர்ந்த எம். எம் குடும்பத்தினர் அறுபதாயிரம் ரூபாவும் வழங்கியுள்ளனர்.

இந்த நிதியை, ஜேர்மன் வெற்றிமணி பத்திரிகை நிறுவனத் தலைவர் எஸ்.சிவக்குமார், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் கையளித்தார்