சிங்கள அரசியல்வாதிகளின் திட்டமிடலே உயிர்த்தஞாயிறு தாக்குதல்!

சிங்கள அரசியல்வாதிகளின் திட்டமிடலே உயிர்த்தஞாயிறு தாக்குதல்!

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

''இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது. அது மீண்டும் நிகழ்கின்றது.'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.