யாழில் பிடியாணையுடைய சந்தேகநபர் கசிப்புடன் கைது…!

யாழில் பிடியாணையுடைய சந்தேகநபர் கசிப்புடன் கைது…!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் சந்தேகநபர் ஒருவர் 20 லீட்டர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதுடைய சந்தேகநபரே இன்றையதினம் (24.05.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபருக்கு ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதன்பின் சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.