இன்றைய ராசி பலன் 19 மே 2023

இன்றைய ராசி பலன் 19 மே 2023

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் 

Aries மேஷம் இன்றைய ராசி பலன்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகளின் பாராட்டுரைகள் கிடைக்கும். உத்தியோக உயர்வுக்கான வழிமுறைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். பெண்களுக்கு சிறந்ததொரு நாளாக இன்றைய நாள் அமைகிறது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மன அமைதி கிடைக்கும். சொத்து வகையில் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும்.

​மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பெண்- மீனம் பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி ஆண் நட்சத்திரங்களுடனான திருமண பொருத்தம்

ரிஷபம் 

Taurus ரிஷபம் இன்றைய ராசி பலன்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு வாகன வகையில் ஆதாயம் இருக்கும். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவதைப் பற்றி திட்டமிடுவீர்கள்.

திருமண முயற்சிகள் மற்றும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை குறிப்பாக கணித பாடத்தில் கூடுதல் கவனம் தேவை. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மற்றவர்களிடம் அதிகம் சண்டையிடும் மற்றும் வாதிடும் 5 ராசிகள் யார் தெரியுமா?

மிதுனம் 

Gemini மிதுனம்  இன்றைய ராசி பலன்

 

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் செல்லும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நலன் நன்றாக இருந்து வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமையைக் கைக் கொள்வது நல்லது. கோபத்தை குறைத்து குணத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.

சனி வக்ர பெயர்ச்சி : மேஷம், கடகம் உள்ளிட்ட 5 ராசிகள் கூடுதல் கவனம் தேவை... பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும்

கடகம் 

Cancer கடகம் இன்றைய ராசி பலன்

 

மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் நன்றாக விருப்பத்துடன் படிப்பர் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு செய்திகள் வந்து சேரும்.

புதிய பிரயாணங்களை பற்றி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலை மற்றும் விசா தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். காலமிது தனவரவு உண்டு.
சுக்கிரன் பெயர்ச்சி 2023: எந்த ராசிக்கு செலவும், இல்லற சுக பாதிப்பு உண்டாகும்?

சிம்மம் 

Leo சிம்மம் இன்றைய ராசி பலன்

சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்பு உண்டு. உணவுப் பொருட்களில் கவனம் கொள்ளவும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் நாளின் பிற்பகுதியில் சுபகாரிய செய்திகள் வந்து சேர வாய்ப்பு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி பெருகும்.

தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் திருமண காரியங்கள் சுப காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

கன்னி Virgo கன்னி இன்றைய ராசி பலன்

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறியளவிலான உடல் நல பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தில் நிலைமை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும்.

துலாம் Libra துலாம் இன்றைய ராசி பலன்

குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு இருந்தாலும் வெற்றியை நோக்கிய பிரயாணம் ஆகவே இருக்கும்.

விருச்சிகம் Scorpio விருச்சிகம் இன்றைய ராசி பலன்

குடும்பத்தில் மன மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

புதிய தொழில் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். இருப்பினும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள் தன வரவு உண்டாகும்.

தனுசு 

Sagittarius தனுசு இன்றைய ராசி பலன்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். உங்கள் கடின உழைப்பே நிர்வாகத்தினர் புரிந்துகொள்வர். இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

சொந்தத் தொழிலை பற்றிய சிந்தனை அதிகமாக வரும் சுயதொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உண்டாகும் நாளின் பிற்பகுதியில் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.

மகரம்

Capricorn மகரம் இன்றைய ராசி பலன்

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். காலம் இது விநாயகர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழிலில் இருப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

கல்விச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சகோதரர் வர்க்கத்தார் அல்லது உடன் பிறந்தவர்களோடு சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கும்பம்

Aquarius கும்பம் இன்றைய ராசி பலன்

குடும்பத்தில் உள்ள வயதானவர்களுடன் சர்ச்சை அனுசரித்துச் செல்ல வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும் நிதி உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உ​டல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதிப்பார்கள். பிற்பகலில் உடல் அசதி அதிகமாக இருக்கும். இன்றைய இரவில் தூக்கம் நன்றாக கிடைக்கும்​
கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையை இதை செய்யுங்கள்

 மீனம்

Pisces மீனம் இன்றைய ராசி பலன்

எதிர்கால சேமிப்பு களை உருவாக்குவது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி காணும் நேரமது நிதி உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுரைகள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடும் காலம் இது.
 

​மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பெண்- மீனம் பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி ஆண் நட்சத்திரங்களுடனான திருமண பொருத்தம்