தமிழர் பிரதேசத்தில் பிள்ளைகளை வன்புணர்ந்த இரு தந்தைமார்கள்..!

தமிழர் பிரதேசத்தில் பிள்ளைகளை வன்புணர்ந்த இரு தந்தைமார்கள்..!

நான்கு சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தைமார் இருவரை காவல்துறையினர் நேற்று (17) கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுகளில் 4, 6, 9 மற்றும் 11 வயதுடைய நான்கு சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களான இரண்டு தந்தைகளுக்கும் தலா இரண்டு பெண் பிள்ளைகள் இருந்துள்ளதுடன், அவர்கள் நால்வரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான தந்தைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.