கொழும்பில் காணாமல் போயுள்ள யாழ் இளைஞன்..!

கொழும்பில் காணாமல் போயுள்ள யாழ் இளைஞன்..!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவித்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார் எழு மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாக தெரிவித்தார்.

குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0775988204, 0775547218 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.