திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது நலன்புரி மற்றும் அவசியமான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும்போது அரசாங்கத்திற்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் பல உதவிகளை வழங்கிவருவதாகவும் அவசியமான கட்டங்களில் பொதுமக்களுக்கான உதவிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் கிடைப்பது அவசியமானது என்று அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் மாவட்ட மக்களுக்கு வழங்க முடியுமான வசதிகளை தாம் வழங்க தயாராக உள்ளதாக இதன்போது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.