
வரலாற்றுச்சாதனை படைத்த யாழ் இந்திரவிழா..!
இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் யாழ். வல்வெட்டித்துறையில் அண்மையில் இடம்பெற்ற இந்திர விழாவில், இந்து தெய்வங்களின் உருவங்கள் மின்னமைப்பினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது வரலாற்றுச்சாதனையாக பதிவாகியுள்ளது.
இந்திரவிழாவிலே அனைத்து மக்களையும் கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இந்திரவிழாவை புதியதொரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற பெருமை ஆதிவைரவர் மின்னமைப்பையே சாருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆண்டில் இந்திரவிழாவில் ஆஞ்சநேயர் 70 அடி உயரம், மாயவர் 28 அடி உயரம், 46 அடி அகலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் 50 அடி உயரம், கிருஷ்ணர் ராதை 34 அடி உயரம் காணப்பட்டு பக்தர்களின் மனதினை கொள்ளையடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்