இன்றைய ராசி பலன் 09 மே 2023
இன்றைய ராசிபலன் மே 9 செவ்வாய் கிழமை நாள் முழுவதும் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிப்பார். இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம். துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் நன்மைகளைத் தரும். அதேசமயம் ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆபத்தான வேலைகளை தவிர்க்க வேண்டும். 12 ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் பார்ப்போம்.
மேஷம்
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் சற்று காலதாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய வாய்ப்பைப் பெறுவார்கள்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வாகன வகையில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
எந்த ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக் கூடாது? எப்போது கல்யாணம் செய்யக்கூடாது?
ரிஷபம்
ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். இவைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். படிப்பை முடித்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை பெறுவார்கள்.
திருமண பொருத்தம்: பெண்களுக்கு பொருந்தாத ஆண் நட்சத்திரங்கள்
மிதுனம்
சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றிக்கான பெறக்கூடிய நல்ல நாள் ஆகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மனமகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேலை சற்று காலதாமதமாகும்.
கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல் வயதில் மூத்தவர்களை சந்தித்தல் குருமார்களை சந்தித்தல் போன்ற காரியங்களில் அல்லது அது சம்பந்தப்பட்ட எண்ணங்களில் ஈடுபடுவீர்கள்.
மிதுன லக்கினத்திற்கு நல்ல கணவன், நல்ல மனைவி அமைய பொருத்தம் இதோ
கடகம்
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் ஆகும்.
கடகம் முதல் விருச்சிகம் வரை: தனக்கென உறுதியான நிலைப்பாட்டை எடுக்காத ராசிகள்
சிம்மம்
உங்களுக்கு வியாபாரத்தில் இன்று நல்ல லாபத்தைக் கொடுக்கும். புத்திசாலித்தனமாக பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமும் லாபம் பெறலாம். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று தேவையற்ற வேலைகளில் இருந்து விலகி உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்துக் கொள்வது நல்லது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கன்னி
உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து, மிக முக்கிய பொருட்கள் மட்டும் வாங்குவது நல்லது. இன்று தேவையற்ற செலவுகளிலிருந்து விலகி இருங்கள்.
உங்கள் மனது மகிழ்ச்சியாக இருக்கும். இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் மன அழுத்தமாக உணர்வீர்கள்.
துலாம்
மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும்.
மாணவர்களுக்கு கல்வித் திறன் பளிச்சிடும் உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு தொல்லைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகளால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை.
விருச்சிகம்
உடல் நலம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும்.
புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள் நண்பர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும்.
தனுசு
ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உத்தியோகத்திலும் தொழில் துறையிலும் தேவையான அளவில் உதவி செய்வார்கள்.
விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிரயாணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டு.
மகரம்
எதிர்பார்த்த பணவரவு உண்டு. பிரயாணம் வெளியூர் வாசம் போன்றவற்றிற்கான திட்டமிடுதல் அவை சம்பந்தப்பட்ட சிந்தனைகள் ஏற்படும் காலம் இது. மனதில் மகிழ்ச்சி நிலவும் முகம் பிரகாசமாக தோன்றும்.
வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை மேம்பட காண்பீர்கள். பெண்களுக்கு இனிய நாள் ஆகும்.
கும்பம்
பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாகும்.
மீனம்
நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கான உகந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
புதிய படிப்புகளுக்கான கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கும். கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் இன்று உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அந்நியோன்னியமாக இருக்கும்.