மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா.

மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா.

ஐ பி எல் வரலாற்றில் அதிக டக் அவுட் ஆன வீரர்களில், மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

சென்னை அணியுடனான போட்டியில் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து மும்பை இந்தியன்ஸ் தலைவர் ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜாவிடம் பிடி கொடுத்து டக் அவுட்டானார். இது ஐபிஎல் போட்டிகளில் அவருடைய 16-வது டக் அவுட்டாகும்.

இந்த டக் அவுட்டின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட் ஆன வீரர்களில், ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

முன்னதாக, மொஹாலியில் கடந்த 3-ம் திகதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 46-வது லீக் போட்டியில், ரோகித் சர்மா இதேபோல் 3 பந்துகளை சந்தித்து, ஐபிஎல் தொடரில் 15-வது முறையாக டக் அவுட் ஆகி 4-ம் இடம் பிடித்திருந்தார்.

ரோகித் சர்மாவுக்கு முன்னதாக சுனில் நரேன், மந்தீப் சிங், தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 டக் அவுட்டுகள் எடுத்து இடம் பிடித்திருந்தனர்.

இந்த வரிசையில் 4-வது இடத்தில் இருந்த நிலையில், சென்னைக்கு எதிரான போட்டியில் 16-வது முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்துள்ளார் ரோகித் சர்மா.