போலி நாணயத்தாள்களுடன் யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது!
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை மறித்து சோனைக்குட்படுத்தப்பட்டபோது போலி நாணயத்தாள்களுடன் யாழ். பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒருவரும், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் பெருமளவு போலி நாணயத்தாள்களை வைத்திருந்துள்ளனர்.
இராணுவ உதவியுடன் பளை காவல்துறையினரால் இவர்கள் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5000 ரூபாய் 250 போலி நாணயத்தாள்களும், 500 ரூபாய் 27 போலி நாணயத்தாள்களுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைபீட மாணவரும், யாழ். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.