போராட்டக்களத்தில் அவமதிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதன் - தூக்கி வீசப்பட்ட உணவுப்பொருட்கள்!
யாழ்ப்பாணம் தையிட்டி போராட்டக்களத்தில் இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தையிட்டி விகாரையை அகற்ற கோரி கடந்த புதன்கிழமை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பங்கேற்றிருந்தார். அவர் போராட்டகாரர்களுக்கு சிற்றுண்டிகளையும் மென்பானங்களையும் வழங்கியிருந்தார்.

இவற்றை போராட்டகாரர்களில் ஒரு பகுதியினர் மாத்திரம் அவற்றை வேலியோரமாக குப்பையில் வீசியிருந்தனர். அந்த சமயம் அங்கயன் இராமநாதன் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
அந்த கட்சியினரின் செயல்பாட்டை அங்கிருந்தவர்களும் கண்டித்தனர். ஆயினும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.