மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு - யாழில் நடந்த சம்பவம்!

மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு - யாழில் நடந்த சம்பவம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட விபத்தால் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த நால்வர் பாதிக்கபட்டுள்ளதுடன் விடும் முற்றாக சேதமடைந்துள்ளது.

வீட்டில் இருந்த உடைகள் மற்றும் உபகரணங்கள் என்பன முற்றாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.