அர்னாப் உடன் நேரலை விவாதத்தின்போது என்ன செய்து கொண்டிருந்தார் கஸ்தூரி: வைரலாகும் வீடியோ

அர்னாப் உடன் நேரலை விவாதத்தின்போது என்ன செய்து கொண்டிருந்தார் கஸ்தூரி: வைரலாகும் வீடியோ

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்கள் குறித்து ஆவேசமாக பதிவு செய்வார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் பல தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு விவாதத்தில் கலந்துகொண்டு தனது ஆக்கபூர்வமான கருத்தை முன்வைத்தும் வருகிறார். அவரது கருத்து பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று அர்னாப் நடத்தும் தொலைக்காட்சி ஒன்றின் நேரடி விவாதத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பாலிவுட் திரையுலகம் குறித்து கங்கனா கூறிய அதிரடி கருத்து குறித்து காரசாரமாக விவாதம் நடந்தது. பொதுவாக அர்னாப் நடத்தும் விவாதத்தில் கிட்டத்தட்ட பாதி நேரத்திற்கும் மேலாக அவரே பேசுவார் என்றும், விருந்தாளிகளை பேச விடமாட்டார் என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது

அந்த வகையில் நேற்றைய விவாதத்தின்போது அர்னாப் பேசிய நேரத்தை தவிர பலருக்கும் பேச வாய்ப்பளிக்கபட்டபோது கஸ்தூரிக்கு அவரது கருத்தை முன்வைக்க கிட்டத்தட்ட வாய்ப்பே தரவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கஸ்தூரி உடனே நேரடி ஒளிபரப்பின்போதே சாப்பிட தொடங்கிவிட்டார். நேரலையில் விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருந்தபோது கஸ்தூரி அதனை கண்டுகொள்ளாமல் ஸ்பூனில் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தன்னை பேச அனுமதிக்காத அர்னாப்புக்கு சரியான பதிலடி கொடுத்ததாக கஸ்தூரிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது