​இன்றைய ராசி பலன் 04 மே 2023

​இன்றைய ராசி பலன் 04 மே 2023

மே 4, வியாழன் அன்று கன்னி ராசிக்குப் பின் துலாம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சந்திரனின் இந்த சஞ்சாரத்தால் மேஷத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதன், குரு, ராகு ஆகியோருடன் சந்திரனின் சமசப்த யோகத்தை உருவாகிறது. இதனுடன் கஜகேசரி யோகமும் இன்று உருவாகிறது. இந்த சூழ்நிலையில் கடகம் மற்றும் கும்ப ராசியினருக்கு நன்மை பயக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரம் மேம்படும். புதிய வருமான வாய்ப்புகளும் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க முயல்கிறீர்கள் என்றால், அதில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள், உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மதியத்திற்கு பிறகு சாதகமான நாளாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் முடிந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நீங்கள் ஒரு புதிய நண்பரின் அறிமுகத்தை பெறுவீர்கள்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 வெற்றி யாருக்கு?- ஜோதிட கணிப்பு : பாஜக மீண்டும் வெற்றி பெறுமா? காங்கிரஸ், JDS வாய்ப்பு எப்படி?

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று அரசியல் துறையில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூக மற்றும் அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இன்று வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைப்பதால் லாபமும் நற்பெயரும் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பிரச்னை ஏற்படலாம்.

சந்திர கிரகணம் 2023 :பம்பர் பரிசு கிடைக்க உள்ள 5 ராசிகள் - இதை செய்தால் யோகம் தான்

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்கள் வேலையில் தீவிரமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அலட்சியத்தால் பணி பாதிக்கப்படும். மாணவர்கள் இன்று போட்டியில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். காதல் வாழ்க்கையில் ஒரு இனிமையான உணர்வு இருக்கும்.

பிரச்னைகளை பேசி தீர்க்கலாம். மாலையில், உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிக்க வாய்ப்புள்ளது. சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தவறான புரிதல் ஏற்படலாம்.

சந்திர கிரகணம் 2023 : இந்த எளிய பரிகாரம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் தெரியுமா?

கடகம்

கடகம்

இன்று கடகம் ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்றவாறு வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் வணிகம் தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். அன்பான நபரை மாலையில் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில், நீங்கள் புத்திசாலித்தனமாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும். பெரியவர்களின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள்.
​மே மாத ராசி பலன்: கஷ்டங்கள் நீங்கி நிம்மதியும், வெற்றிகளையும் குவிக்க உள்ள ராசிகள்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் புதிய வருமானம் கிடைப்பதோடு, செல்வச் செழிப்பும் உண்டாகும். குடும்ப வாழ்க்கை இனிமையாகவும், சாதகமாகவும் இருக்கும். குடும்பத்தில் உறுப்பினர்களிடையே ஒற்றுமை நிலவும். சகோதரரின் உதவியால் இன்று உங்களின் முக்கிய வேலைகள் முடியும். நிதி விஷயங்களில் முன்னேற்ற நிலை சிறப்பாக இருக்கும். மாணவர்களின் செயல்திறன் மேம்படும்.

வார ராசிபலன்: மே 2 முதல் 8 வரை - துலாம் முதல் மீனம் வரை : புதிய வேலை யாருக்கு கிடைக்கும்?

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தை விட இன்று சிறப்பாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் புதிய பொறுப்பும், கௌரவமும் கிடைக்கும். இன்று நீங்கள் வணிகம் தொடர்பாக சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். பயண அலைச்சல் மன அழுத்தத்தைக் கொடுக்கும். ஆனால் எதிர்காலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகளுக்கான செயல்களில் ஈடுபடுவீர்கள். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நண்பர் அல்லது உறவினரின் உதவியால் உங்களின் நீண்ட நாள் பிரச்சனை தீரும். எங்கிருந்தோ போதுமான அளவு பணத்தைப் பெறலாம்.
 

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று விருச்சிக ராசிக்காரர்கள் பணியிடத்தில் சில பிரச்சனைகளால் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில், உங்கள் வருமானத்திற்கும், செலவிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தவும்.

இன்று உங்கள் மனைவியுடன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிக்கலாம். குழந்தையின் கல்வி தொடர்பாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வீட்டைப் பற்றிய உங்கள் பொறுப்புகளை புறக்கணிப்பதைத் தவிர்க்கவும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, வியாபாரம் சிறப்பாக செய்ய முடியும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்காததால் மனம் சோர்வடைய வாய்ப்புள்ளது. கடன் பிரச்னைகள் குறையும். உங்களுக்கு வர வேண்டிய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.
இன்று எந்த ஒரு முக்கியமான வேலைக்கும் மற்றவர்களை நம்பி இருக்காதீர்கள். சரியான திட்டமிடலுடன் செயல்படுவது அவசியம்.

மகரம்

மகரம்

மகர ராசியினருக்கு இன்று சற்று குழப்பமான நாளாக இருக்கும். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பச் சூழல் மற்ற நாட்களை விட இன்று நிம்மதியாக இருக்கும்.

பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது நல்லது.
நிதானத்துடன் வேலை செய்தால் வெற்றி நிச்சயம். குடும்பம், பணியிடத்தில் வாக்குவாதங்கள் மற்றும் தகராறுகள் தவிர்க்கவும். குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பல விஷயங்களில் சாதகமாகவும், நன்மையாகவும் இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு நல்ல லாப சூழல் அமையும். முன்னேற்றகரமான நாளாக அமையும்.

காதல் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். உறவிலும் வலிமை இருக்கும். மாலையில் குடும்பத்துடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். இன்று உங்களின் தர்க்க சக்தி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதன் பலன்களைப் பெறுவீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த முட்டுக்கட்டை இன்று நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக அலைச்சல் இருக்கும். இதன் காரணமாக சோர்வு மற்றும் உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுடன் பழக நேரம் கிடைக்கும். எதிர்காலத்திற்கான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கான சாதக நாள்.