சட்டவிரோத எரிபொருள் விநியோகத்தை முடக்க நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

சட்டவிரோத எரிபொருள் விநியோகத்தை முடக்க நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

சட்டவிரோத எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் செயற்பட வேண்டும். அந்த அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, சட்டவிரோத எரிபொருள் விநியோகம் தொடர்பிலான முறைப்பாடுகளை 0112106767 அல்லது 0117296130 ஆகிய இலக்கங்களுக்கு வழங்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.