இன்றைய ராசி பலன் 03 மே 2023

இன்றைய ராசி பலன் 03 மே 2023

மே 3, புதன்கிழமை, சந்திரன் கன்னி ராசியில் நாள் முழுவதும் சஞ்சரிக்க உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இன்று கன்னியில் சந்திரன், மேஷத்தில் ராகு, புதன், சூரியன், குரு ஆகியோர் சஞ்சரிக்கக்கூடிய நிலையில் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இப்படிப்பட்ட நிலையில் இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பம் ஏற்படும். 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இன்று அனுகூலமாக இருக்கும். இன்று வேலையில் புதிய முயற்சி செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்துவார்கள், அவர்களால் சில பிரச்சனைகள் வரலாம். கவனம் தேவை. வணிக வகுப்பினருக்கும் நேரம் சாதகமாக இருக்கும். இன்று முதலீடு செய்ய சாதமான நாள் அல்ல. தொழிலை விரிவுபடுத்த இன்று குடும்பத்தினருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.

வார ராசிபலன்: மே 2 முதல் 8 வரை - மேஷம் முதல் கன்னி வரை : புதிய வேலை யாருக்கு கிடைக்கும்?

ரிஷபம்

ரிஷபம்

அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். பொதுமக்களிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும், செல்வாக்கு அதிகரிக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க நல்ல நேரமாக இருக்கும். தாயின் உடல் நலனில் அக்கறை காட்டவும். இன்று, அனைத்து வேலைகளும் விரைவாக முடியும். உங்களுக்கு மன அமைதியும் கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவும் இருக்கும். மேலும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிப்பீர்கள்.

சந்திர கிரகணம் 2023 : இந்த எளிய பரிகாரம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் தெரியுமா?

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பானதாக இருக்கும். வேலை தேடுபவர்கள் இன்று நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தாலும், திறமையாலும் உங்கள் வேலையில் முன்னேற்றம், நன்மைகளைப் பெறுவீர்கள்.

தொழில் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மூத்தவர்களின் ஆலோசனை மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துகளால் லாபம் பெறுவீர்கள். அனைவரும் பணியிடத்தில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.


மே மாத ராசி பலன்: கஷ்டங்கள் நீங்கி நிம்மதியும், வெற்றிகளையும் குவிக்க உள்ள ராசிகள்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். ராசியின் அதிபதி சந்திரன் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குழந்தைகளின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று சமூகப் பணியில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து, அவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். சமூக வட்டமும் அதிகரிக்கும்.

எந்த ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக் கூடாது? எப்போது கல்யாணம் செய்யக்கூடாது?

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவிக்கக்கூடிய நாள். அலுவலகத்தில் பணியை உரிய நேரத்தில் முடித்து அதிகாரிகளின் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிரிகளின் சதிகள் தோல்வியடையும். மாலை நேரத்தை குடும்பத்தினருடன் செலவழிப்பீர்கள், வாழ்க்கைத் துணையுடன் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பீர்கள். உறவினர்களுடன் மனக்கசப்புகள் தீரும். உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டிய நாள்,

கன்னி

கன்னி

கன்னி ராசியின் இன்று சந்திரன் சஞ்சரிப்பதால் இன்று உங்களுக்கு பெரியளவில் சாதகமாக இருக்காது. இன்று மனதளவில் மிகவும் குழப்பமாக இருக்கும். அதனால் எதைப் பற்றியாவது கவலையும் பதற்றமும் அடையாமல் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி நாள்.

நிதி விஷயங்களில், இன்று நீங்கள் எந்த முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திடீர் செலவுகளால் சிரமப்படுவீர்கள். ஆனால் இன்று குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதாரண நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் முக்கிய பிரச்சனைகளை விவாதிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். பணியிடத்தில் எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படலாம்.

பணியிடத்தில் கடினமாக உழைத்தும் அதற்கான பலன் கிடைக்காமல் அவதி அடைவீர்கள், வருமானம் குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருக்கும்s. வேலையில் பிஸியாக இருப்பதால், வீட்டை கவனிக்க முடியாமல் போகலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எதிர்கால விஷயங்கள் குறித்து யோசிப்பீர்கள். இன்று, பணியிடத்தில் சலுகைகளைப் பெறலாம். வேலையில் புதிய முயற்சிகள், திட்டங்கள் குறித்து சிந்திப்பீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.
அரசாங்கத்தின் முழு பலனையும் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று எதையும் கவனமாக செய்ய வேண்டும். நீங்கள் எந்த முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் எடுப்பதிலும் கவனமாக இருக்கவும், இல்லையெனில் அது எதிர்காலத்தை பாதிக்கும். இன்று உங்களுக்கு சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு தேவைப்படும். இன்று உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குழந்தைகளின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி அடைவார்கள். இன்று உங்கள் தொழிலில் புதிய விஷயங்களை செய்ய நினைக்கலாம்.

வார ராசிபலன்: மே 2 முதல் 8 வரை - துலாம் முதல் மீனம் வரை : புதிய வேலை யாருக்கு கிடைக்கும்?

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று துணை நிற்கும். கடந்த சில நாட்களாகவே தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெரிய அதிகாரியின் உதவியால் நிலம் சம்பந்தமான பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

வேலைப்பளுவுக்கு மத்தியில், இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தேட நேரம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையில் தடைகள் வரலாம். 

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று மிகவும் பிஸியாக இருப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். உங்கள் வேலையில் கடினமாக உழைத்து அதில் வெற்றி பெற்றிட முடியும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, பேச்சில் மென்மையைக் கடைப்பிடித்தால் நன்மைகளைப் பெற்றிடலாம். இன்று நீங்கள் உங்கள் வேலையை முன்கூட்டியே திட்டமிடுவீர்கள், ஆனால் சில மாற்றங்களால் வேலை தடைப்படலாம். முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் கவனமாக முடிவெடுக்கவும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாமியார் தரப்பிலிருந்து மரியாதை கிடைக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் ஆரோக்கிய குறைபாடு நீங்கி, உடல் நலம் மேம்படும். பிள்ளைகளின் திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வரும். இன்று சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் உங்கள் வேலைகள் நிறைவேறும். அதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.