இன்றைய ராசி பலன் 01 மே 2023

இன்றைய ராசி பலன் 01 மே 2023

இன்று திங்கட்கிழமை மே 1ம் தேதி. மாதத்தின் முதல் நாளான இன்று சூரியன் சிம்மம், கன்னி ராசியில் உள்ள நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் இன்றைய அற்புத நாளில் சந்திரனின் அற்புதத்தால் மகரம், விருச்சிகம் உள்ளிட்ட ராசிகளுக்கு மிகவும் சிறப்பான பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

மேஷம்

மேஷம்

மாணவர்களுக்குக் கல்வியில் சில இடையூறுகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று அலுவலகத்தில் சில புதிய உரிமைகள், பொறுப்புகள் கிடைக்கும். மேலும் பதவி உயர்வும் கிடைக்கும். தாயாருடன் சில கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளுடன் உல்லாசமாக நேரத்தை கழிப்பீர்கள்.

எந்த ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக் கூடாது? எப்போது கல்யாணம் செய்யக்கூடாது?

ரிஷபம்

ரிஷபம்

காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். பதற்றம் ஏற்படலாம். உங்கள் மனதில் குழப்பங்கள் இருக்கும் என்பதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது உங்களுக்கு நன்மை பயக்கும். இன்று உங்கள் வணிகத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுனம்

 

இன்று நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயல்பாடு வெற்றியும், எதிர்காலத்தில் பல நன்மைகளும் கிடைக்கும்.உங்கள் செல்வம் பெருகும் மற்றும் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் எந்தவிதமான நெறிமுறையற்ற செயல்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சில எதிரிகள் தொந்தரவு இருக்கும். அவசரம் வேண்டாம், பொறுமையுடன் செயல்படுங்கள்.

சனி வக்ர பெயர்ச்சி 2023 : 5 ராசிக்கு மலை போல் குவிய உள்ள தொல்லை... இதில் எச்சரிக்கை அவசியம்

கடகம்

கடகம்

 

இன்று பெரியவரின் அறிவுரை உங்கள் தொழிலில் நல்ல பலனைத் தரும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல செய்திகள் வந்து சேரும். அரசியல் தொடர்பான நபர்களுடன் உறவுகள், ஆதரவு கிடைக்கும். சமூகத் துறையிலும் உங்கள் நோக்கம் அதிகரிக்கும். பயணம் செய்ய வேண்டியது இருக்கும். பணியிடத்தில் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம். மாலை நேரத்தை நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள்.

சிம்மம்

சிம்மம்

இன்று உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரிடமிருந்து நீங்கள் நல்ல செய்திகளைக் கேட்கலாம். இதனால் உங்கள் பொருளாதாரச் சுமையும் குறைந்து உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு இன்று பணப் பலன்களைப் பெறலாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்.

எந்த ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக் கூடாது? எப்போது கல்யாணம் செய்யக்கூடாது?

கன்னி

கன்னி

குடும்பச் சூழல் நன்றாக இருக்கும், உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பச் சொத்து சம்பந்தமாக ஏதேனும் தகராறு இன்று முடிவுக்கு வரும். இன்று,சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களைச் சுற்றியுள்ள சூழலை இனிமையாக வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்கள் பணியில் புதிய மாற்றம் ஏற்படலாம்.

துலாம்

துலாம்

பணியிடத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில வீட்டு வேலைகள் இன்று முடிக்க நேரம் கிடைக்கும். வேலை வாய்ப்புத் துறையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் இன்று முடிவுக்கு வரும். நீங்கள் தலைமைத்துவ திறனை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை முன்னேறுவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

உத்தியோகத்தில் நிலையற்ற தன்மையால் மனம் அலைபாயலாம். சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவ புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்கள் எதிர்காலத்தை பலப்படுத்தும். உறவினர்களுடனான உறவில் இனிமை இருக்கும். மாலையில் ஆன்மிக பணிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு கவனத்துடன் தயாராக வேண்டும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். அனைத்து பொறுப்புகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.

தனுசு

தனுசு

வியாபாரத்தில் புதிய விஷயங்களை முயல்வதில் பிரச்னை ஏற்படலாம். இருப்பினும் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் பழைய பொறுப்புகளில் இருந்தும் விடுபடலாம். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவீர்கள். பணியிடத்தில் புதிய திட்டப்பணிகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்

மகரம்

உங்கள் பணியிடத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். உங்கள் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சட்ட விவகாரத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும், உங்கள் பேச்சால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியும். கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பணம் திரும்ப வராது. உங்கள் துணையுடன் அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள்.

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்கவும். உறவில் மரியாதை அதிகரிக்கும் என்றாலும் உங்கள் பேச்சு, செயலில் கவனமாக கனிவாக இருப்பது அவசியம். அக்கம் பக்கத்தினருடன் எந்த தகராறிலும் ஈடுபட வேண்டாம். செலவு அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

மீனம்

மீனம்

உங்கள் தொழில், வியாபாரத்திற்குப் போட்டிக்கு அதிகமாக இருக்கும். இன்று, இழந்த பொருட்களையும், பணத்தையும் பெற்று மனம் மகிழ்ச்சியடையும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க நாள் நன்றாக இருக்கும். ஆனால் எந்த வகையான முதலீடுகளையும் செய்யும் முன், உங்கள் மனைவி, மூத்தோர்களிடம் கலந்தாலோசிக்கவும். இன்று நீங்கள் உங்கள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையைப் பேணவும். தந்தையின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளவும்.