இன்றைய ராசி பலன் 28 ஏப்ரல் 2023

இன்றைய ராசி பலன் 28 ஏப்ரல் 2023

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை, சந்திரன் அதன் சொந்த ராசியான கடகத்தில் சஞ்சரிக்க உள்ளார். மேலும் குருவுக்கு 4ல் இருப்பதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதன் காரணமாக மேஷம், ரிஷபம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில், வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஆதரவு கிடைக்கும்., இருப்பினும் இன்று வீட்டுச் செலவுகள் அதிகமாக வாய்ப்புள்ளதால் மன உளைச்சல் ஏற்படலாம்.

இன்று சட்ட சிக்கல் தொடர்பான விஷயங்களில் நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மன அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம், எனவே உங்கள் பணிகளை சிந்தனையுடன் முடிக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, இன்று குழந்தையின் எதிர்காலம் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும். வணிகம் மற்றும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த நாள் லாபம் மற்றும் மங்களம் தருவதாக இருக்கும். மாலையில் கோவில் அல்லது சமூக விழாவில் கலந்து கொள்ளலாம். இன்று உங்கள் சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

 

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமான சூழ்நிலை இருக்கும். இன்று பணியிடத்தில் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அதனால் எச்சரிக்கையுடனும் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிடைக்கும்.

அனைத்து பிரச்சனைகளையும் உங்கள் திறமையால் தீர்க்க முடியும். முயற்சி செய்யுங்கள். உங்கள் நிதி நிலை குறைவாக இருக்கும். அதனால் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள், புத்திசாலித்தனமாகப் பணத்தை செலவிடுங்கள்.

ஒரு சிலந்தி செடி இவ்வளவு பிரச்சினைகளை போக்குமா? - Spider Plant எங்கு வைத்தால் அதிக நன்மை

கடகம்

கடகம்

 

கடக ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கை துணையின் உணர்வுகள் மற்றும் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். இது உங்கள் உறவை வலுப்படுத்தும் மற்றும் உங்கள் காதல் வாழ்க்கையை மேம்படுத்தும். இன்று நீங்கள் இழந்த பொருளை திரும்ப பெற வாய்ப்புள்ளது, அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் இன்று ஆசிரியர்களின் ஆதரவையும், அறிவுரையையும் பெறுவார்கள். மூத்த நபரின் உதவியால் இன்று பிரச்னைகளை தீர்க்க முடியும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியினர் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் நாள். எதிரிகளால் பாதிக்கப்படலாம். உங்கள் வேலையை முடிப்பதில் தடைகளை உருவாக்கலாம். செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக செயல்படவும்.

உங்கள் சமூக வட்டமும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு கிடைக்கும். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

கன்னி 

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் பல நாட்களாக இருந்து வந்த குழப்பத்தில் இருந்து விடுபடுவார்கள். இன்று உங்கள் பணி சுமுகமாக நடக்கும். இன்று நீங்கள் அன்பானவரிடமிருந்து பரிசுகளைப் பெறலாம்.

தாய்வழி உறவில் இனிமை உண்டாகும். மாலை நேரம் ஜாலியாக கழியும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும், ஆனால் சில புதிய எதிரிகளும் உருவாகலாம், எனவே கவனமாக இருக்கவும்.

கனவில் பல்லியைப் பார்த்தால் ஆபத்தா? - பலி கனவில் வருவதன் அர்த்தம், பரிகாரம் இதோ

துலாம்

துலாம்

துலாம் ராசி மாணவர்கள் மனம் கவனச் சிதறலுடன் இருக்கும். வணிக பயணம் கடினமாக இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் அதன் பலன்களை நீங்கள் நிச்சயமாகப் பெறுவீர்கள். குழந்தை திருமணம் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரும். திருமணம் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று வேலையில் முன்னேற்றம் ஏற்படும், திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம், பேச்சில் கவனம் தேவை. யாரிடமாவது தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல நாள். மரியாதை அதிகரிக்கும்.
வேலை தொடர்பான விஷயங்களில் செயல்திறனை மேம்படுத்துங்கள். இது உங்கள் பிரச்சனைகளை குறைக்கும். மாலையில் சில சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சில சச்சரவுகளைத் தீர்க்க முடியும். எனவே இன்று சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று உங்கள் பேச்சால் அனைவரையும் திருப்திப்படுத்துவீர்கள், மேலும் எதிர்காலத்திற்கான சில முடிவுகளையும் எடுப்பீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சில பணிகள் நிறைவேற்ற சாதகமான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வயிறு சம்பந்தமான பிரச்சனை உங்களைத் தொந்தரவு செய்யும்.

மகரம்

மகரம்

இன்று, மகர ராசிக்காரர்கள் தங்கள் எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டியது இருக்கும். இன்று வியாபாரத்தில் அதிக லாபம் பெறலாம். மாலையில் மனம் சற்று அலைக்கழிக்கக் கூடும். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

இன்று நீங்கள் வாழ்க்கைத் துணையின் வீட்டின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் சிறப்பாக முடிக்க முடியும். இன்று பணியிடத்தில் நிலைமை மேம்படும். உங்கள் வியாபாரத்தில் பிள்ளைகள் உங்களுக்கு உதவுவார்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் தந்தையின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தும் விதத்தில் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவும்.

நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் மன அமைதி பெறுவீர்கள். இன்றுபல நல்ல விஷயங்கள் கூடிவரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். நீங்கள் சில புதிய வேலைகளைச் செய்யத் திட்டமிடலாம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார்கள். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான விஷயத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். நீங்கள் எங்காவது முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு சாதகமான நாள்.

நீங்கள் கடனில் இருந்து விடுபடுவீர்கள், உங்கள் நிதி நிதி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல பலன் அடைவீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் வேலை இரண்டையும் நீங்கள் சரியாகக் கையாள வேண்டிய நாள்.