இன்றைய ராசி பலன் (24 ஏப்ரல் 2023)

இன்றைய ராசி பலன் (24 ஏப்ரல் 2023)

ராசிபலன் 24 ஏப்ரல் 2023: துலாம், தனுசு உள்ளிட்ட இந்த 5 ராசிகளில் பணம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும், உங்கள் நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

ஏப்ரல் 24 திங்கட்கிழமை, ரிஷப ராசியிலும் தொடர்ந்து மிதுன ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் சந்திரனால் துலாம், தனுசு ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கூடி மனதில் திருப்தி ஏற்படும், 12 ராசிகளுக்கு ராசி பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நாள் முழுவதும் பிறர் நலனுக்காக செலவிடுவீர்கள். இது மன அமைதியைத் தரும். இன்று உத்தியோகத்தில் உங்களுக்கு பணிச் சுமை ஏற்படலாம். உங்களின் திறமையான வேலையால் எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தைப் பொறாமைப்படலாம். ஆனால் அவர்களை புறக்கணித்து உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டிய நாள். மாலையில் வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் சில பின்னடைவு ஏற்படலாம்.

​​குரு பெயர்ச்சி 2023 : எந்த ராசிக்கு ராஜ வாழ்க்கை? நோய் தொற்று, விலையேற்றம் எப்படி இருக்கும்?

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலையில் நேரத்தை செலவிடுவார்கள். மதியத்திற்குப் பிறகு நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தில் உங்கள் மரியாதை கூடும். நீங்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் அன்பான நபரை நீங்கள் சந்திக்கலாம். மாணவர்களுக்கு நல்ல ஆலோசனை கிடைக்கும்.

குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு தெரியுமா? - சிங்கில்ஸ் திருமணத்திற்கு ரெடியா இருங்க

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள், உங்கள் நாள் மகிழ்ச்சியாக கழியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுக்கிரகத்தால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் சில விலையுயர்ந்த பொருட்களைப் பெறலாம், அல்லது வாங்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையின் ஆதரவும் நன்மைகளும் கிடைக்கும். இன்று வியாபாரத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.

குரு பெயர்ச்சி பலன் 2023 எப்போது?- பண அதிகம் சேர உள்ள ராசிகள் தொழில், வேலை வளர்ச்சி யாருக்கு?

கடக ராசி

கடக ராசி

கடக ராசிக்காரர்கள் இன்று கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நாள் சிறப்பாக இருக்கும். வங்கி அல்லது நிறுவனத்தில் கடன் வாங்கும் எண்ணம் இருந்தால், அதுவும் எளிதாகக் கிடைக்கும். இன்று உங்களின் மரியாதை, பதவி, கௌரவம் கூடும். பணியிடத்தில் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், இல்லையெனில் எதிர்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

குரு பெயர்ச்சி 2023 : 12 ராசிக்கான ஒரு வரி பலன்கள்

சிம்மம்

சிம்மம்

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் இரண்டிலும் கடும் போட்டி நிலவும், தடைப்பட்ட வேலைகளும் முடிவடையும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல நாள். இன்று அவர்கள் விரும்பியபடி பலன் கிடைக்கும். நீண்ட காலமாக ஒரு பிரச்சனை உங்களை தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அது இன்று அதிக சிக்கலை ஏற்படுத்தும். இன்று உங்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.வீட்டில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை இன்று நீங்கும். இந்த நாளில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறலாம். சாதகமற்ற சூழ்நிலைகளில், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபட சாதக நாள். மாலையில் திடீர் பண ஆதாயம் கூடும், நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை செலவிடுவீர்கள்.
 

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். அதிக அலைச்சல் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இன்று மாணவர்கள் போட்டித் தேர்வு போன்ற விஷயங்களில் சிறப்பான சாதனைகளைப் படைக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான எந்த முயற்சியும் சாதக பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எங்கிருந்தோ பணம் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இது நிதி நிலைமையை வலுப்படுத்தும் மற்றும் சிக்கலில் இருந்து முன்னேற்றம் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று வீட்டில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செலவு அதிகரிக்கும். பொருள் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களிடம் பணப் பரிவர்த்தனை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இன்று உங்கள் பணம் மற்றவர்களிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. நீதிமன்ற விஷயங்களில் கவனம் தேவை. இன்று எதிரிகளின் பலம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மகரம்

மகரம்

இன்று வேலை மற்றும் வியாபாரத்தில் விரும்பிய முடிவுகளைத் தரும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவ, மாணவியர் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவார்கள்.

வியாபாரத்தில் தேவையான சில மாற்றங்களைச் செய்வது பற்றி நீங்கள் யோசிக்கலாம், இது உங்களுக்கு நன்மை பயக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவீர்கள். இன்று சமூகப் பணிகளில் விரும்பி செயல்படுவீர்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் செலவுகள் கைமீறிப் போகும். இன்ற் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு இருக்கும்.

உங்கள் மாமியார் தரப்பிலிருந்தும் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். நீங்கள் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் நினைத்தால், அது தொடர்பான ஆவணங்களைச் சரியாக படித்துப் பார்ப்பத்ட்து நல்லது. சில உடல் வலிகள் மாலையில் உங்களை தொந்தரவு செய்யலாம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று திருமண வாழ்வில் மகிழ்ச்சி அடைவார்கள். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அனைத்து வேலைகளும் எளிதாக முடிவடையும். வியாபாரத்தில் வெற்றி அதிகரிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, வெளியூர் பயணங்களையும் மேற்கொள்ளலாம்.
பெற்றோரின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று மாணவர்கள் மன மற்றும் அறிவுச் சுமைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.