இன்றைய ராசி பலன் (23 ஏப்ரல் 2023)

இன்றைய ராசி பலன் (23 ஏப்ரல் 2023)

இன்று சந்திர தரிசனம் செய வேண்டிய அற்புதமான நாளான இன்று, கிரகங்களின் சஞ்சாரப்படி, 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் இன்று கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

 

ராசிபலன்: ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை, சந்திரன் மேஷத்தில் சஞ்சரிக்கிறார். அங்கு சூரியன், புதன் மற்றும் ராகுவுடன் சந்திரனின் சேர்க்கை இன்றும் தொடரும். இன்று மிதுன ராசிக்காரர்கள் வாழ்வின் கடினமான அனுபவங்களைக் கற்றுக் கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறுவார்கள். விருச்சிகம் இயலாத காரியங்களைச் செய்து தைரியத்தைக் காட்டுவீர்கள், கும்பம் வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தத்தைப் பெறலாம். இன்று மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் ராசி பலன் எப்படி இருக்கும் பார்ப்போம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று தொழில் ரீதியாகத் தங்கள் சிந்தனையைத் தெளிவாக வைத்திருப்பார்கள். அது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். இன்று உங்கள் குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக எந்த முடிவையும் நீங்கள் எடுக்கலாம். உங்கள் மன குழப்பத்தில் தந்தையின் ஆலோசனை உங்களுக்குத் தேவைப்படும். இன்று வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், செலவு அதிகரிக்கும். ஊதாரித்தனத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.

குரு பெயர்ச்சி பலன் 2023 எப்போது?- பண அதிகம் சேர உள்ள ராசிகள் தொழில், வேலை வளர்ச்சி யாருக்கு?

இன்றைய ராசி பலன் 21 ஏப்ரல் 2023

Daily Rasi Palan - 21.04.2023 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan | Samayam Tamil Lifestyle

ரிஷபம்:

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்ய நினைப்பீர்கள், அதில் உங்கள் தந்தையின் ஆலோசனை தேவைப்படும். இளையவர்களால் பணப் பலன் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் மனதிற்கு நிவாரணம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

குரு பெயர்ச்சி 2023 : 12 ராசிக்கான ஒரு வரி பலன்கள்

மிதுனம்:

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்கள் துணை, துணையின் வீட்டாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நீங்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் இன்று நீங்கள் ஏமாற்றமடையலாம். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் முன்னேற்றம் கண கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

​​9 ல் குரு : சிம்ம ராசிக்கு கோடீஸ்வர யோகம், திருமண பாக்கியம் உறுதி - குரு பெயர்ச்சி பலன்கள்​

கடக ராசி:

கடக ராசி:

கடக ராசிக்காரர்கள் பிள்ளைகள் முலம் நல்ல செய்தி கிடைக்கும். அவர்கள் சில நல்ல வேலைகளைச் செய்வார்கள். அரசியலில் உங்கள் மதிப்பு கூடிக் கொண்டே போகும். இன்று மாமியார் தரப்பிலிருந்து மரியாதை கிடைக்கும். மாணவர்களுக்கு இன்று படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள், அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு உடல் நல பிரச்சனை கவலை தருவதாக இருக்கும். இன்று நீங்கள் எந்த முடிவையும் கவனமாகச் சிந்தித்து எடுக்கவும்.

குரு பெயர்ச்சி 2023 : எந்த ராசிக்கு ராஜ வாழ்க்கை? நோய் தொற்று, விலையேற்றம் எப்படி இருக்கும்?

சிம்மம் :

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்கள் இன்று குடும்ப உறவுகளை அன்புடன் கையாளுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். உங்கள் மனதில் அமைதி இருக்கும். குடும்ப உறவுகளை நல்ல முறையில் பேணுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடத்தில் சோம்பேறித்தனத்தை விட்டு, முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். மாலையில் குடும்ப உறுப்பினர்களுடன் புனித யாத்திரை செல்லலாம்.

​​குரு பெயர்ச்சி 2023 : எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் தெரியுமா?

கன்னி

கன்னி

இன்று கன்னி ராசிக்காரர்களின் வியாபாரத்தில் விரைவான மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அது உங்களை வெற்றியின் ஏணிக்கு அழைத்துச் செல்லும். ஆனால் எந்த முடிவுகளை எடுக்கும்போதும் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் இன்று தேர்வில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு தெரியுமா? - சிங்கில்ஸ் திருமணத்திற்கு ரெடியா இருங்க

துலாம்:

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இன்று தடைபட்ட பணிகளை செய்து முடிப்பார்கள். புதிய வேலை, செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்பாட்டால் நீங்கள் இலகுவாகவும் நிதானமாகவும் உணர்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பருவகால நோய்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

Vastu Tips : கணவன் - மனைவி அந்நியோன்னியம், ஆரோக்கியம் அதிகரிக்க எளிய வாஸ்து குறிப்பு இதோ

விருச்சிகம்:

விருச்சிகம்:

இந்த நாளில் நீங்கள் உங்கள் ஆடம்பரத்தைக் குறைத்து கொள்ள வேண்டிய நாள். நிதி நிலைமை சிறக்கும். இன்று நீங்கள் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் விஷயங்களில் அதிக சுறுசுறுப்பாக இருப்பது நல்லது. அதன் மூலம் முடியாத காரியங்களைச் சாத்தியமாக்க முடியும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், உங்கள் மனநிலை இன்று மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். எனவே வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
 

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று நீங்கள் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்கவும். அப்போதுதான் நீங்கள் நினைத்த வெற்றியை பெற முடியும். இன்று, உங்கள் வணிகத்தில் புதிய ஒப்பந்தத்தை முடிக்க முடியும், இது உங்கள் நிதி நிலைமைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மகரம்:

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சில குழப்பங்கள் ஏற்படும். மாலைக்குள் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலையில் சரியான திட்டமிடலுடன் செயல்படவும். இன்று, உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது அவசியம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும்.

கும்பம்:

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் இன்று காலை முதலே சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மற்றும் எதிர்கால விஷயங்களை யோசித்து மன வேதனை அடைய வேண்டாம். இன்று வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என யோசிக்கவும். உத்தியோகம், தொழிலில் இருப்பவர்கள் எதிரிகளால் சில இடையூறுகள் உருவாக வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் நிதி நிலை பலப்படும்.

மீனம்:

மீனம்:

மீன ராசிக்காரர்கள் இன்று வியாபாரம் தொடர்பான சில பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இது நன்மை தரும். உங்கள் இனிமையான பேச்சின் மூலம், பணியிடத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். குடும்பத்தில் தகராறு ஏற்படாமல் தடுக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உங்கள் வேலையில் ஆக்கப்பூர்வமான முறையில் கையாள்வீர்கள்.