குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கவுள்ள நிறுவனங்கள்
நாட்டில் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தொழில்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடல் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நிறைவுறுத்தப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய விலையை விட குறைந்த விலையில் அந்த நிறுவனங்களுக்கு நாட்டினுள் எரிபொருளை விநியோகிக்க வாய்ப்பு ஏற்படும் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் - சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்கு நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு, களஞ்சியப்படுத்துவதற்கு மற்றும் விநியோகிப்பதற்கு குறித்த நிறுவனங்களுக்கும் அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.