
யாழ் வடமராட்சி பகுதியில் நீண்டகாலமாக திருடிய நபர் கைது
வடமராட்சி பகுதியில் நீண்டகாலமாக கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் நெல்லியடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நெல்லியடி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டு வெற்று சமையல் எரிவாயு கொள்கலன்கள், தொலைக்காட்சி பெட்டி ஒன்று, இரண்டு பவுண் தங்க சங்கிலிகள் இரண்டு, ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.