தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்

தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா? என்பது இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக குறித்த ஆணைக்குழு கூடவுள்ளது.

இதற்காக சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.