
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு உந்துருளி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மற்றும் ஒரு உந்துருளி பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளது.
அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் மயானம் ஒன்றின் மதில் தொடர்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது.
இதன்போது வெளிநாட்டில் வசிக்கும் உள்ளூர் பொதுமகன் காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.