யாழ் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு

யாழ் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

நேற்றிரவு சிற்றூந்து ஒன்றில் வருகை தந்த சில வைத்தியசாலையின் பினவரை ஊடாக வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.

அவர்களை தடுக்க முயற்சித்த காவலாளி மீது வாள்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு, தெய்வாதீனமாக காவலாளி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படுத்திய குறித்த நபர்கள் சிறிது நேரத்தில் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.