பிரபல தமிழ் நடிகர் மரணம்: இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!

பிரபல தமிழ் நடிகர் மரணம்: இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் நேற்றிரவு (24) இரவு MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

 

இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை முனுசாமி சாலை, கே. கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
 

இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் அறிமுகமானார்.
 

ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை ராமதாஸ் இயக்கி உள்ளார்.
 

எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்த ராமதாஸ் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.
 

அத்தோடு வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கி சட்டை, மெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 

ராமதாஸ் மறைவுக்கு திரையுலகம் சார்ந்தோரும், ஏனையோரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் காலமானார் | Actor E. Ramadoss passed away due  to heart attack - hindutamil.in