அபர்ணாவிடம் எல்லைமீறி நடந்து கொண்டா கல்லூரி மாணவன்.அதன் பின் என்னாச்சு தெரியுமா?

அபர்ணாவிடம் எல்லைமீறி நடந்து கொண்டா கல்லூரி மாணவன்.அதன் பின் என்னாச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், 2017 -ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதன் பின் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். இப்படத்தில் அபர்ணா சிறப்பாக நடித்திருந்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

தற்போது இவர் நடிப்பில் தங்கம் என்ற மலையாள திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தங்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக அபர்ணா கேரளாவில் உள்ள சட்ட கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மாணவன் மேடையில் அமர்ந்திருந்த அபர்ணாவிடம் பூங்கொத்து கொடுத்து விட்டு அவர் தோள் மீது கை வைக்க முயன்றுள்ளார்.

அப்போது அபர்ணா பாலமுரளி அங்கு இருந்து நகர்ந்து மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்துவிட்டார். அதன் பின் மீண்டும் மேடை ஏறிய அந்த மாணவன் அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டு கைகொடுக்க முயன்றார் ஆனால் அந்த நபருக்கு அபர்ணா கைகொடுக்க மறுத்துவிட்டார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.